விரைவில் திருமணம்?.. லட்சுமி மேனன் குறித்து மவுனம் கலைத்த விஷால்.. அவரே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
11 August 2023, 9:12 am
vishal lakshmi menon-updatenews360
Quick Share

பொதுவாக சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளிடையே காதல் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், சமீப காலமாக விஷாலின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்தி பரவி வருகிறது. இப்போது மீண்டும் அவரது திருமணம் குறித்த வதந்திகள் பரவ தொடங்கியது.

vishal lakshmi menon-updatenews360

நடிகை லட்சுமி மேனனுடன் விஷால் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியானது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாகவும், விரைவில் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக இருப்பதாகவும், தகவல்கள் வெளியானது.

vishal lakshmi menon-updatenews360

விரைவில், அவர்கள் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அறிவிப்பார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தன் திருமணம் குறித்து பரவிக்கொண்டு இருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

vishal lakshmi menon-updatenews360

அதாவது, அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் பொதுவாக என்னைப் பற்றிய எந்த பொய்யான செய்திக்கும், வதந்திகளுக்கும் நான் பதில் அளிப்பதில்லை என்றும், அது பயனற்றது என்பதை நான் உணர்கிறேன் எனவும், ஆனால் இப்போது லட்சுமி மேனன் உடனான தனது திருமண பற்றிய வதந்தி பரவியது, இதை முற்றிலும் மறுக்கிறேன். இது முற்றிலும் உண்மை மற்றும் ஆதாரமற்றது என்று விளக்கம் அளித்துள்ளார்.

vishal lakshmi menon-updatenews360

மேலும், தனது பதிலுக்கு காரணம் ஒரு பெண் முதலில் அதிகமாக அவர் பாதிக்கப்படுவதாகவும், நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆக்கிரமித்து கெடுக்கிறீர்கள் மற்றும் அவரது இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள் என்றும், ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை டி கோடிட்டு காட்டுவதற்கு இது ஃபார்முடா முக்கோணம் அல்ல.

vishal lakshmi menon-updatenews360

நம்பிக்கை உணர்வு மேலோங்கும் நேரம் வரும்போது எனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அறிவிப்பேன். அதற்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விஷால் மற்றும் லட்சுமி மேனனுக்கு இடையே காதலும் இல்லை கல்யாணமும் இல்லை என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 617

0

1