3 பெண்களுடன் டேட்டிங்.. தீராத விளையாட்டு பிள்ளை விஷால் செய்யபோகும் லீலைகள்..!

Author: Vignesh
2 January 2024, 5:08 pm
vishal - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

vishal

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது. பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன. 45 வயதை எட்டியும், இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் விஷால். பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளாமல் சமீபத்தில், நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது. ஆனால், அது தன் உறவினர் பெண் என்றும், ஒரு பிராங்க் என்றும் விஷால் தெரிவித்திருந்தார். முன்னதாக, கடந்த 2010ல் இயக்குனர் திரு இயக்கத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷால் நடித்திருந்தார். 3 பெண்களுடன் டேட்டிங் செய்யும் ரோலில் நடித்த விஷால் மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்கு தான் விஷால் அந்த பிராங் வீடியோவை வெளியிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Views: - 178

0

0