தாய்லாந்தில் பார்ட்டி.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட VJ பார்வதி..!
Author: Vignesh19 April 2024, 2:02 pm
பல நிகழ்ச்சிகளில், பல யூட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். யூட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!
சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.
உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த My3 வெப் தொடரில் முக்கியமான ரோலில் விஜே பார்வதி நடித்து இருந்தார்.
இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் youtube சேனலில் வீடியோக்களை பகிர்ந்து வரும் vj பார்வதி தன்னுடைய 28 வது பிறந்த நாளை தாய்லாந்தில் சென்று கொண்டாடியுள்ளார். அதிலும், எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் தண்ணீரை ஊற்றி விளையாடும் தாய்லாந்து பண்டிகைக்கு சென்று முகம் சுளிக்க வைக்கும் படியாக ஆட்டம் போட்டிருக்கிறார். அங்கு எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
0
0