முடிந்தது தொடர் விடுமுறை…சொந்த ஊரில் இருந்து புறப்பட்ட மக்கள் : ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2022, 8:40 pm
Madurai Rail Crowd - Updatenews360
Quick Share

மதுரை : தொடர் விடுமுறைக் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் குவிய துவங்கியுள்ளனர்

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி , சித்ராபௌர்ணமி, ஈஸ்டர் பண்டிகை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் சென்னை மற்றும் இதர வட மாவட்டங்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா ரயில் சீட்டு பெற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து பயணச் சீட்டை வாங்கி செல்கின்றனர்.

மேலும் ரயில் நிலையங்களில் கணிசமான அளவு ரயில் பயணிகள் ரயில்களுக்காக காத்திருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 551

0

0