பிரதமர் குறித்து முகநூலில் கேவலமாக விமர்சித்த காங்., பிரமுகர்.. குவிந்த பாஜகவினர் : இருதரப்பு மோதல்.. கல்வீசித் தாக்குதல்.. போலீசார் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2023, 6:42 pm
Cong BJp
Quick Share

பிரதமர் குறித்து முகநூலில் கேவலமாக விமர்சித்த காங்., பிரமுகர்.. குவிந்த பாஜகவினர் : இருதரப்பு மோதல்.. கல்வீசித் தாக்குதல்.. போலீசார் குவிப்பு!

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் பேஸ்புக் தளத்தில் மோடியை அவதூறாக பேசியதை கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் பாஜகவினர் திரண்டனர். அங்கிருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு செல்ல முயலும் போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் பாஜகவினர் சிலர் வேறு வழியாக காங்கிரஸ் அலுவலகம் நோக்கி ஓடிச் சென்றனர். அப்பொழுது காங்கிரஸ் மற்றும் பாஜக சேர்ந்த இரு தரப்பிலும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி விடும் நேரத்தில் சம்பவம் நடைபெற்றதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பீதி அடைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் கலைத்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

Views: - 160

0

0