இந்தமாதிரி ஒரு முறை பாசிப்பருப்பு பாயாசம் வச்சுபாருங்க…ருசில மெய் மறந்து போய்டுவீங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 February 2023, 7:20 pm
Quick Share

பாயாசல்தில் பல வகைகள் உண்டு. சேமியா பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், அவல் பாயாசம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று நாம் பருப்பு பாயாசத்தை எப்படி வித்தியாசமான முறையில் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு- 1கப்
தேங்காய் பால்- 1கப்
பசும்பால்- 1/2 கப்
ஏலக்காய்- 2
வெல்லம்- 1/4 கப்
முந்திரி பருப்பு- 5
பாதாம் பருப்பு- 5
நெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
*முதலில் பாசிப்பருப்பை சுத்தம் செய்து கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*ஊற வைத்த பாசிப்பருப்பை மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளலாம்.

*ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைத்த பாசிப்பருப்பை வேக வைக்க பயன்படுத்திய தண்ணீருடன் மசித்து சேர்த்து கொள்ளவும்.

*இப்போது வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.

*வெல்லம் கரைந்ததும் பசும்பால் ஊற்றவும்.

*பால் நன்கு பொங்கி வரும்போது தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

*இரண்டு நிமிடங்கள் கழித்து ஏலக்காயை பொடித்து சேர்த்து கொள்ளலாம்.

*இப்போது வேறொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

*வறுத்த முந்திரி மற்றும் பாதாமை பாயாசத்தில் சேர்த்து அடுப்பை அணைத்தால் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.

Views: - 471

0

0