விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு.. இன்னும் 14 நாட்கள்…. மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 1:24 pm
Quick Share

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதனை கேட்டு தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிய அவர், குடும்பத்தின் அரவணைப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடந்த 18ம் தேதி விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

vijayakanth

இந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விஜயகாந்த்‌ அவர்களின்‌ உடல்நலத்தில்‌ நல்ல முன்னேற்றம்‌ காணப்பட்டது. எனினும்‌ கடந்த 24 மணி நேரத்தில்‌ அவரது உடல்நிலை சீரான நிலையில்‌ இல்லாததால்‌, அவருக்கு நுரையீரல்‌ சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர்‌ விரைவில்‌ பூரண உடல்நலம்‌ பெறுவார்‌ என்று நம்புகிறோம்‌. அவருக்கு இன்னும்‌ 14 நாட்கள்‌ மருத்துவமனையில்‌ தொடர்‌ சிகிச்சை தேவைப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த மருத்துவமனையின் இந்த அறிவிப்பு தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 251

0

0