ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை விவகாரத்தில் அதிரடி திருப்பம்… கொள்ளையனின் தந்தை எடுத்த விபரீதம் : பகீர் கிளப்பும் போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2023, 10:13 am
Jos
Quick Share

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை விவகாரத்தில் அதிரடி திருப்பம்… கொள்ளையனின் தந்தை எடுத்த விபரீதம் : பகீர் கிளப்பும் போலீசார்!!

கோவையில் கடந்த மாதம் 28ம் தேதி காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையிக் கொள்ளை போனது. 4.8 கிலோ தங்கம், பிளாட்டினம், வைரம் நகைகள் கொள்கையடிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் விஜய் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டு 3.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.இதில் விஜயின் மாமியார் யோகராணி என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 1.35 கிலோ தங்க,வைர நகைகள் மீட்கப்பட்டது.

இன்னும் 300 கிராம் முதல் 400 கிராம் நகைகள் மட்டும் மீட்கப்பட வேண்டி உள்ளது.3 நாட்களில் கொள்ளையனை பிடித்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினத்தை கோவை போலீசார் விசாரித்து விட்டு திரும்பினர்.

இந்த நிலையில் முனிரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி கம்பை நல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 159

0

0