போலீஸ் வாகனத்தில் ஏறி போதை இளைஞர் அடாவடி : சினிமா பட பாணியில் இளைஞரை துரத்தி அடித்த காவலர்… போதை நகரமாக மாறும் தலைநகரம்? ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 2:11 pm
Cannabis Boy Caught - Updatenews360
Quick Share

தெலங்கானா : ஐடி நகரமான ஹைதராபாத்தில் கஞ்சா போதையில் போலீசாரின் வாகனத்தில் மீது ஏறி அடாவடி செய்த இளைஞரால் போதை நகரமாக மாறி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் நகருக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் ஐடி நகரம் என்ற பெயர் உள்ளது. தென்னிந்தியாவின் ஐடி நகரங்களில் முக்கிய பெயர் பெற்ற நகரம் ஐதராபாத் நகரம் ஆகும்.

அங்கு இந்திய நிறுவனங்கள் உட்பட பல்வேறு பன்னாட்டு ஐடி நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து செயலாற்றி வருகின்றன.

இந்த நிலையில் ஹைதராபாத் நகரம் போதைப்பொருட்களை விற்பவர்களின் கைகளில் சிக்கி போதை நகரமாக மாறி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாகவே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள அபீப் நகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் போதையில் வீதிகளில் நடனம் ஆடுவதாகவும் அந்த வழியாக செல்பவர்கள் மிரட்டி தலைதெறிக்க ஓட செய்வதாகவும் அபிப் நகர் போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் முழு போதையில் சாலையில் செல்பவர்களை மிரட்டி கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களில் பலர் தப்பி ஓடிவிட்ட நிலையில் அஜய் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஆனால் கஞ்சா போதையில் இருந்த அஜய் போலீஸ் பிடியில் இருந்து தப்பி போலீசார் வந்த வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்.

பின்னர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது பாய்ந்து ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.

சற்று நேரத்தில் அஜயை மடக்கி பிடித்த போலீசார் அபிப் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் ஹபீப் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 540

0

0