விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
29 July 2022, 9:37 am
Quick Share

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிறகு கடந்த ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் முழு பாடத்திட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும், பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

Views: - 456

0

0