தமிழகத்தில் அதிக கிளைகள் கொண்ட பிரபல பேக்கரியில் கைவரிசை : ரூ.1 லட்சம் கொள்ளை… சிசிடிவி காட்சியில் சிக்கிய முகமூடி கொள்ளையன்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 1:29 pm
Theft CCTV - Updatenews360
Quick Share

விழுப்புரம் : பிரபல பேக்கரி கடையில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ஒரு லட்ச ரூபாய் பணம் திருடிச் சென்ற சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் பிரபல பேக்கரி கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் அண்ணாமலை நேற்று வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு கடையில் வேலை செய்யும் 6 பேருடன் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று காலையில் அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர் கடை பூட்டை உடைத்து எடுத்தது குறித்து கடை உரிமையாளர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்து பார்த்த அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

அங்கு உள்ள சிசிடிவி பதிவை ஆய்வு மேற்கொண்டதில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பண பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வீடியோ பதிவு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் அருகிலிருந்த மணி என்பவருக்கு சொந்தமான பங்க் கடை ஒன்றில் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த 2000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

வழக்கு பதிவு செய்து விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு கடையில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 466

0

0