வானவேடிக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்து : 3 பேர் கருகி பலி… 2 பேர் படுகாயம்.. தீயை கட்டுக்குள் கொண்டு வர போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 2:25 pm
Cuddalore - Updatenews360
Quick Share

கடலூர் அருகே வானவேடிக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் எம். புதூர் அருகே ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையை அவருடைய மருமகன் மோகன் என்பவர் நடத்தி வந்தார். வான வேடிக்கை வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஏற்பட்ட விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 415

0

0