பழங்கள் சாப்பிடும் போது இந்த விஷயங்களை பின்பற்ற மறக்காதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
11 August 2022, 9:23 am

சரியான உணவை உண்பது நல்ல ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இது சரியான ஊட்டச்சத்துக்களை சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் சாப்பிடுவதற்கு சமம். பல ஊட்டச்சத்துக்களின் நன்மைகளைத் தரும் அத்தகைய உணவுக் குழுவில் ஒன்று பழங்கள். ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய பழங்களில் பல நன்மைகள் உள்ளன. எனவே, எந்த நேரத்திலும் அவற்றை எந்த அளவிலும் சாப்பிடுவது நல்லதா? இல்லை, பழங்களை உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் சாப்பிடுங்கள்: ஒரு நாளைக்கு இரண்டு பழங்களை சேர்ப்பதால், உங்கள் சருமம் பளபளப்பாகவும், நீரிழிவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவும்.

அளவு கட்டுப்பாடு: பழங்கள் அதிகமாக சாப்பிடுவது எளிது. ஆனால் பகுதியின் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். பழங்களில் பிரக்டோஸ் உள்ளது. இது ஒரு வகை கார்போஹைட்ரேட். இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது எடை அதிகரிப்பதற்கும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் மட்டுமே சாப்பிடுங்கள்.

பழச்சாறுகள் உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம்: உங்கள் உணவில் பல பழங்களைச் சேர்க்க பழச்சாறுகள் சிறந்த வழியாகும். பேக் செய்யப்பட்டதை விட, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்களை பருகுங்கள். பழச்சாற்றை சேமித்து வைக்க வேண்டாம். அதனை செய்த ஒரு சில நிமிடத்தில் குடித்து விடவும்.

பருவகால மற்றும் உங்கள் ஊரில் வளரும் பழங்கள்: ஏற்றுமதி செய்வதை விட பருவகால மற்றும் உங்கள் பகுதியில் விளையும் பழங்களை தேர்வு செய்யவும். பருவகால பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றவை. ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் விலை உயர்ந்தவை மற்றும் பல நாட்கள் பாதுகாக்கப்பட்ட பின்னரே உங்கள் கைக்கு கிடைக்கின்றன.

நேரம்: நீங்கள் எடை இழப்பு அல்லது சர்க்கரை கட்டுப்பாட்டை கொண்டுள்ளீர்கள் என்றால், பழங்களை சாப்பிட சிறந்த நேரம் மதிய உணவு வரை ஆகும். மாலை அல்லது இரவு உணவின் போது நீங்கள் பழங்களை சேர்க்க விரும்பினால், பப்பாளி சிறந்தது.

பாலுடன் பழங்கள்: பாலுடன் பழங்களை கலக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பழங்களை பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு சர்க்கரை நோய், பிசிஓஎஸ் அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவற்றைக் கலக்க வேண்டாம். உங்கள் மில்க் ஷேக்குகளில் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை தேர்வு செய்யவும்.

புரோட்டீன் உணவுகளுடன் கலக்கவும்: நீரிழிவு, உடல் பருமன் அல்லது பி.சி.ஓ.எஸ் போன்ற உடல்நலக் குறைபாடுகள் காரணமாக பழங்களின் சர்க்கரை உள்ளடக்கம் அல்லது உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், பழங்களுடன் புரதத்தைச் சேர்த்து சாப்பிட முயற்சி செய்யவும்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 738

    0

    0