கரு கருவென்று அடர்த்தியான புருவங்கள் பெற உதவும் ஒரு சமையலறை பொருள்!!!

Author: Hemalatha Ramkumar
30 April 2022, 10:32 am
Quick Share

ஒருவரது முகத்திற்கு கூடுதல் அழகை சேர்ப்பதில் புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மேக்கப் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அடர்த்தியான மற்றும் கருமையான புருவங்கள் மற்றும் கண் இமைகள் வேண்டும் என்று இன்று பலர் ஆசைப்படுகின்றனர். இருப்பினும், பலருக்கு மெல்லிய கண் இமைகள் மற்றும் புருவங்களே உள்ளது. பலர் தங்கள் புருவங்களை அழகாக காட்டுவதற்கு ஒப்பனை தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள்.

பலருக்கு வயதாகும்போது புருவம் மெல்லியதாக மாறும். ஆனால் இன்று இளைஞர்களுக்கு கூட ஹார்மோன்கள் அல்லது மோசமான கவனிப்பு காரணமாக புருவம் மெல்லியதாக மாறுகிறது. முதுமை, ஊட்டச்சத்து குறைபாடுகள், அரிக்கும் தோலழற்சி, காண்டாக்ட் டெர்மடிடிஸ், அலோபீசியா அரேட்டா மற்றும் தைராய்டு குறைபாடு ஆகியவை புருவம் மெலிவதற்கான சில காரணங்கள்.

இருப்பினும், நீங்கள் அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளை அடைய விரும்பினால், நீங்கள் பார்லருக்குச் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் அவற்றை ஒரே ஒரு எளிய தயாரிப்பு மூலம் பெறலாம். அது தான் ஆமணக்கு எண்ணெய்!

தடிமனான புருவங்களையும் கண் இமைகளையும் பெற நீங்கள் ஆமணக்கு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

*ஒரு மென்மையான பிரஷை ஆமணக்கு எண்ணெயில் நனைக்கவும்.
* நீங்கள் மஸ்காராவைப் பயன்படுத்துவதைப் போலவே உங்கள் கண் இமைகளிலும் இதைப் பயன்படுத்துங்கள். கண்களில் எண்ணெய் படாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
* மேல் மற்றும் கீழ் இமைகளில் தடவவும்.
*இரவு முழுவதும் அப்படியே விடவும்.
*அடுத்த நாள் கழுவவும்.

பயனுள்ள முடிவுகளுக்கு, காலையில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை தோலுடன் ஆமணக்கு எண்ணெயை அகற்றவும்.

Views: - 533

0

0