வர பொங்கலுக்கு இந்த மாதிரி சர்க்கரை பொங்கல் டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
14 January 2023, 6:49 pm
Quick Share

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வந்தாச்சு. பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகிய இரண்டும் செய்யப்படுவது வழக்கம். அதில் பலருக்கு ஃபேவரெட் சர்க்கரை பொங்கல் தான். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவபது சர்க்கரை பொங்கல் ரெசிபி. ஒரு முறை இது போல சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
பாசிப் பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ச்சிய பால் – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப் வெல்லம் – ஒரு கப் தண்ணீர் – 1/2 கப்
நெய் – 2-3 தேக்கரண்டி முந்திரி பருப்பு- சிறிதளவு
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை

செய்முறை:
*ஒரு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பாசிப்பருப்பை வாசனை வரும் வரை ஒரு நிமிடம் வறுக்கவும்.

*இதே நெய்யில் பச்சரிசியை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு அடுப்பை அணைத்து இரண்டையும் நன்றாக கழுவி கொள்ளவும்.

*இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைக்கவும். இதில் கழுவிய பச்சரிசி, பால், தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.

*குக்கரில் பிரஷர் அடங்கியதும் அரிசி மற்றும் பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காய்ச்சிய பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கிளறவும்.

*அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரித்து கொள்ளவும்.

*இந்த வெல்லப் பாகை குக்கரில் ஊற்றி கிளறவும். பொங்கல் கெட்டியாக இருந்தால் இந்த நேரத்தில் சூடான பால் ஊற்றவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறுங்கள்.

*பொங்கல் ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.

*ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து பொங்கலில் சேர்க்கவும். அதோடு பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் பொடி தூவி விடவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து விடலாம்.

*ருசியான சர்க்கரை பொங்கல் இப்போது ரெடி ஆகிடுச்சு.

Views: - 359

0

0