மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்… மது வாங்கிக் கொடுத்து நண்பனை கொன்ற இளைஞர் ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 December 2023, 10:45 am
Quick Share

கோவை – மதுக்கரை போடிபாளையத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்த வழக்கில் மனைவின் கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் நாகமண்டலை சேர்ந்தவர் ராஜமுருகன். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜமுருகன் கோவை சீரநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், பேரூர் மதுக்கரை அருகே போடிபாளையம் மலுமிச்சம்பட்டி சாலையில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். மதுக்கரை போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மதுக்கரை போலீசாரின் தீவிர விசாரணையில், ராஜ முருகனுடன் தங்கி இருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவர் சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து ராஜசிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

கைதான ராஜசிங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறும் போது:- ராஜமுருகனும், அவரும் தூரத்து உறவினர்கள். கட்டிடத் தொழிலாளிகளான அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்து உள்ளனர். ராஜமுருகன் தனது மனைவியுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். ஆனால் ஊரில் இருக்கும் போதே ராஜமுருகனின் மனைவிக்கும், ராஜசிங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்து உள்ளனர். தற்பொழுது, இங்கு வந்துவிட்ட நிலையிலும், ராஜமுருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜசிங்கம் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியுடன் பழகி வந்துள்ளார். இந்த கள்ளக் காதல் விவகாரம் ராஜமுருகனுக்கு தெரிய வரவே, அவர் அவருடைய மனைவியை கண்டித்தார்.

இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து அவருடைய மனைவி ராஜ சிங்கத்திடம் கூறியுள்ளார். அவர்கள் கள்ளக் காதலருக்கு ராஜமுருகன் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த ராஜமுருகன் பிற்பகல் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்திவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்து படுத்து தூங்கினார்.

இரவு போதை தெளிந்ததும் கண் விழித்த அவர், மது குடிக்க அவரது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், வீட்டிலிருந்து வெளியே வந்த ராஜமுருகன் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். இதனைப் பார்த்து ராஜசிங்கம் அவரிடம் மது வாங்கித் தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பொழுது, அவரை கொலை செய்வதற்காக வீட்டில் இருந்து சுத்தியலை எடுத்து அவர் இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டு சென்று உள்ளார். இந்நிலையில் ராஜசிங்கம் மது அருந்தவில்லை. ராஜமுருகனுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து பின்னர், போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாதை வழியாக வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது ராஜமுருகன் முன்னாள் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது, அவருக்கு பின்னால் நடந்த சென்று ராஜசிங்கம் மறைத்து வைத்து இருந்த சுத்தியலால் அவரது தலையில் தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவரது தலையில் சுத்தியலால் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இருந்தார். அதன் பின்னர் ராஜசிங்கம் எதுவும் தெரியாதது போல் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், அடிக்கடி ராஜ முருகனின் மனைவியிடம் செல்போனில் பேசியது வந்ததை வைத்து ராஜா சிங்கத்தை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கைதான ராஜசிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 271

0

0