இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது… அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி கவுரவிப்பு..!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 12:34 pm
Quick Share

இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது, இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இந்த இசைக்குழு 8 பாடல்களை பாடியுள்ளது.

விருதுபெற்ற இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 448

0

0