முடிவுக்கு வந்த 16 வருட திருமண வாழ்க்கை : மனைவியை விவாகரத்து செய்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான்!!

3 July 2021, 2:03 pm
Quick Share

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது இரண்டாவது மனைவி இயக்குநர் கிரண் ராவ்வை விவகாரத்து செய்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் மனைவி கிரண் ராவ். இருவரும் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் கூட்டாக விவாகரது செய்ததாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை காதல் திருமணம் செய்து கொண்டார் அமீர் கான். இருவவருக்கும் இரண்டு குந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் வெளியான லகான் திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 7 தேசிய விருது மட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுக்காக லகான் பரிந்துரைக்கப்பட்டது.

அந்த படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் தான் கிரண் ராவ். கடந்த 2005ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் 16 ஆண்டு கால காதல் வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகால உறவில் எங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டோம். எங்கள் உறவு அன்பு, மரியாதை,நம்பிக்கை ஆகியவற்றால் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க விரும்புகிறோம். ஆனால், கணவன் மனைவியாக அல்ல. இனி தனித்தனியாக வாழ்ந்தாலும் குழந்தைக்கு இணை பெற்றோர்களாக குடும்பமாக இருப்போம். மகன் ஆசாத்துக்கு நல்ல பெற்றோர்களாக இருப்போம். அதேபோல, திரைப்படங்களில் நாங்கள் விரும்பினால் தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள்” என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Views: - 320

0

0