காதலை ஏற்க மறுத்த காங்., நிர்வாகியின் மகள் கொடூரமாக குத்திக் கொலை… கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ

Author: Babu Lakshmanan
18 April 2024, 9:48 pm
Quick Share

கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹயர்மத்தின் மகள் நேகா ஹயர்மத். 24 வயதான இவர், ஹுப்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் படித்து வரும் சீனியர் ஒருவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ‘உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ன..? ஏடாகூடமான பதிலை சொல்லி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பெண் எம்பி..!!! (வீடியோ)

ஆனால், அவரது காதலை ஏற்க அந்த மாணவி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதியம் மாணவி கல்லூரிக்கு வந்திருந்த போது, அந்த சீனியர் மாணவர் அவரை மடக்கி கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்த போதும் விடாமல் குத்தி கொலை செய்தார். பின்னர், அங்கிருந்து தப்பியோடினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 165

0

0