‘உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ன..? ஏடாகூடமான பதிலை சொல்லி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பெண் எம்பி..!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
18 April 2024, 9:27 pm
Quick Share

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக கூறி சர்ச்சையில் சிக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனது அனல் பறந்த பேச்சின் மூலம் பிரபலமானவர் திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி மஹுவா மொய்த்ரா. ஆனால், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜகவுக்கு எதிராக கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் படிக்க: தேர்தல் கருத்து கணிப்புகள் தடை செய்யப்படுமா…? கொந்தளிக்கும் வாக்காளர்கள்!

பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, மத்திய அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலில் மஹுவா மொய்த்ரா மேற்கு வங்காளத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மஹுவாவிடம் “உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ற கேள்விக்கு, “செக்ஸ் தான் எனது எனர்ஜி” என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Views: - 138

0

0