மகாராஷ்டிராவில் தொடர் கனமழையால் வெள்ளம்: 164 பேரின் சடலங்கள் மீட்பு..100க்கும் மேற்பட்டோர் மாயம்..!!

Author: Aarthi
26 July 2021, 6:57 pm
Quick Share

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maharashtra Floods LIVE: Death Toll Rises to 164, NDRF Calls Off Rescue Ops  in Landslide-hit Raigad

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளித்தால் இதுவரை உயிரிழந்தவர்களில் 164 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 2.29 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 25,564 விலங்குகள் இறந்து உள்ளன. மொத்தம் 56 பேர் காயமடைந்தனர், மேலும் 1028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 7,832 பேர் தற்போது 259 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Maha monsoon mayhem: Death toll rises to 164, 100 missing

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சதாரா மாவட்டத்தில் பதான் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டுள்ளார். தற்போது மழை சற்று ஓய்ந்து வெள்ளம் வடிந்து வருவதால் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த வீதிகள், ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

Views: - 162

0

0