கிணற்றில் குதித்து தற்கொலை..! கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி விபரீத முடிவு..!

By: Sekar
14 October 2020, 6:34 pm
Minor_Girl_GangRape_UpdateNews360
Quick Share

ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பிரதாப்கரின் பாக்ராய் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.

துணை போலீஸ் சூப்பிரண்டு தனு உபாத்யாய், சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினர் குடு சிங், டபு சிங் மற்றும் குனு திவாரி ஆகிய மூன்று நபர்களை குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“ஒரு சிறுமி நேற்று புவாசி கிராமத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு அவர் ஆளாகியுள்ளார்.

ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மற்ற இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.” என ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Views: - 41

0

0