இந்தியாவில் தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் எவை? எவை?: மத்திய அரசு வெளியிட்ட லிஸ்ட்..!!

Author: Rajesh
22 December 2021, 3:41 pm
Quick Share

புதுடெல்லி: இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முடக்கிய 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணைய தளங்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை சட்டத்தின் கீழ் புதிதாக அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் முறையாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர், இந்திய ராணுவம், சிறுபான்மையின மக்கள், ராமர் கோவில், ஜெனரல் பிபின் ராவத் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்மந்தப்பட்ட சேனல்கள் தவறான கருத்துக்களைப் பரப்பிய காரணத்துக்காக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சில யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

இந்த சேனல்களை பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பின்னால் இருந்து இயக்கியுள்ளது. 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த சேனல்களை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 50 கோடிகளுக்கு மேலான பார்வைகளை இந்த சேனல்கள் பெற்றுள்ளன என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கூறுகிறது.

தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் பட்டியலில், The Punch Line, InternationalWeb News, Khalsa TV, The Naked Truth, 48 News, Fictional, Historical Facts, Cover Story, Go Global, eCommerce, Junaid Haleem Official, Tayyab Hanif, Zain Ali Official, Mohsin Rajput, Official, Kaneez Fatima, Sadaf Durrani, Mian Imran, Ahmad, Najam Ul Hassan, Bajwa, and News24 உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த சேனல்களின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 கோடி வரை இருக்கும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 358

0

0