சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் செம்மரம் கடத்தல் : 4 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 10:34 am
Andhra Wood - Updatenews360
Quick Share

ஆந்திரா : சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்தப்பட்ட செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் சென்னை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பீலேர் போலீசார் நேற்று மாலை பீலேர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் எட்டு செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

காரில் இருந்தவரை கைது செய்து விசாரணை நடத்திய போது சென்னையில் உள்ள ஆவடி பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தப்பட்டு வரும் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவித்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில் சென்னைக்கு சென்ற போலீசார் கண்ணனுடைய பண்ணை வீட்டில் சோதனை அங்கிருந்து சுமார் 11 டன் எடையுடைய 388 செம்மரக்கட்டைகள், ஒரு கார், ஒரு லாரி ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

செம்மரக்கட்டைகள் உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தி பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக செங்குன்றம் பகுதியை சேர்ந்த மகேஷ் குமார், அசோக்குமார், ஆவடியை சேர்ந்த சங்கரய்யா மற்றும் சித்தூரை சேர்ந்த தயானந்த நாயுடு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 540

0

0