உத்தர பிரதேசத்தில் கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சோகம்…!!

16 November 2020, 1:50 pm
accident - updatenews360
Quick Share

சித்தார்த்நகர்: உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் மதுபானி கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

சிறிது நேரத்தில் அந்த கார் சாலையை ஒட்டி உள்ள சிறு ஓடையில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

up accident - updatenews360

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். குழந்தையின் மொட்டை போடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பீகார் நோக்கி சென்றபோது இவர்கள் விபத்தில் சிக்கி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 14

0

0