2024ம் ஆண்டுக்குள் 60,000 கி.மீ.க்கு உலகத்தரத்திலான நெடுஞ்சாலைகள் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

10 July 2021, 11:00 am
nithin gatkari - updatenews360
Quick Share

டெல்லி : 2024ம் ஆண்டுக்குள் 60,000 கி.மீட்டர் நீளத்திற்கு உலகத்தரத்தினாலான நெடுஞ்சாலைகளை அமைப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை மேம்பாடு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது ;- உலகளவில் இந்தியா 63 லட்சம் கி.மீ. சாலை கட்டமைப்புடன் 2வது இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு பெரும்பங்காற்றுகிறது.

எனவே, சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.105 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 40 கி.மீ. என்ற அடிப்படையில் 2024ம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும், என்றார்.

Views: - 154

0

0