குரங்கின் புத்திசாலித்தனம் – புலியின் நம்பிக்கை! யார் ஜெயித்தது பாருங்கள்!!

3 April 2021, 9:30 am
Quick Share

மரத்தில் குரங்கை வேட்டையாட புலி எடுத்த முயற்சியில், புத்திசாலித்தனமாக செயல்பட்ட குரங்கு, புலியின் நம்பிக்கையை வீழ்த்தி வெற்றி பெற்று உயிர் தப்பி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு குரங்கை பிடிக்க புலி மரம் ஏறி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள்.. உங்களுக்கு இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ அதிசயத்தை உண்டாக்கும். இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி (ஐஎப்எஸ்) பிரவீன் அங்குசாமி கடந்த வாரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

வீடியோவில் குரங்கு ஒன்றை வேட்டையாட புலி மரத்தின் மீது ஏறி இருப்பதை காட்டுகிறது. அதில் புலியின் தாக்குதலில் இருந்து தப்பித்து, குரங்கு தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. 30 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், மரத்தின் கிளை ஒன்றில் புலி அமர்ந்து, கிளையின் நுனியில் தொங்கி கொண்டிருக்கும் புலியை வேட்டையாட காத்திருக்கிறது. அலர்ட்டாக அமர்ந்திருக்கும் குரங்கு, புலி தாக்கும் சமயத்தை எதிர்பார்த்து தொங்கி கொண்டிருக்கிறது. புலி தாக்க வரும் சமயத்தில், கிளையிலிருந்து லாவகமாக வேறு கிளைக்கு தாவி விடுகிறது. மரத்தில் பேலன்ஸ் செய்ய முடியாத புலி, அங்கிருந்து தரையில் கீழே விழுந்துவிடுகிறது.

இந்த வீடியோவை டுவிட்டரில், 14 ஆயித்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கின்றனர். 1,500க்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்ய அது வைரலானது. பலரும் குரங்கின் சமயோகித புத்தியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர், இந்த வீடியோ நிஜ வாழ்க்கைக்கு ஒரு பாடம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0

Leave a Reply