ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பிளாட்பாரம் – ரயில் இடையே சிக்கிக் கொண்ட மாணவி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 4:03 pm
Train - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே மாணவி சிக்கி கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர்- ராயகடா பாசஞ்சர் ரயிலில் வந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் கீழே இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கி கொண்டார்.

இதனை கவனித்த ரயில்வே போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பிளாட்பாரத்தை உடைத்து மனைவியை மீட்டனர்.

பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 390

0

0