நாட்டிலேயே முதல்முறையாக 100% மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி: சாதனை படைத்தது புவனேஸ்வர்..!!

Author: Aarthi
2 August 2021, 2:23 pm
Quick Share

புவனேஷ்வர்: புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் என்னும் சாதனையை படைத்துள்ளது.

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் நகரம் என்ற பெருமையை பெற்றது.

Bhubaneswar, CovidVaccine, 100Percent, First City, புவனேஸ்வர், கொரோனா, கோவிட், தடுப்பூசி, 100 சதவீதம், முதல் நகரம், சாதனை

இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிராக 100 சதவீதம் மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


இதோடு புவனேஷ்வரில் உள்ள சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜூலை 31ம் தேதிக்குள் புவனேஷ்வரில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிர்ணயித்தோம், அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு 2வது தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தி விட்டோம்.

100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 30 மையங்கள் இயக்கப்பட்டன.

latest tamil news

நடமாடும் தடுப்பூசி மையங்களும் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன. இது தவிர பள்ளிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக நோய் தடுப்பாற்றல் மையங்கள் 15 என்ற எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன.

Views: - 200

0

0