என்னது இந்திய அரசியலமைப்புக்கும் அயோத்திக்கும் இப்படியொரு தொடர்பா..? சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்வீட்..!
5 August 2020, 12:54 pmஅயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை விழாவிற்கு முன்னதாக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய இறைவன் ராமர், சீதை மற்றும் லக்ஷ்மண் ஆகியோரின் ஓவியத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பின் அசல் ஆவணத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அந்த ஆவணத்தின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ரவிசங்கர் பிரசாத், “இந்திய அரசியலமைப்பின் அசல் ஆவணத்தில் ராமன், மாதா சீதா மற்றும் லக்ஷ்மண் ஆகியோர் ராவணனை தோற்கடித்து அயோத்தி திரும்பிய அழகிய ஓவியத்தை வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.” என்று அவர் மேலும் கூறினார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடிக்கல் நாட்டும் விழா தற்போது நடந்து வருகிறது.
பல உயர்மட்ட தலைவர்கள் உட்பட மொத்தம் 175 பேர், இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சாதுக்கள் மற்றும் முனிவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.
பிரமாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று முன்னதாக, பல பாஜக தலைவர்களும், முதல்வர்களும் புனித நகரமான அயோத்தியில் பூமி பூஜை விழாவுக்கு முன்னதாக மக்களை வரவேற்றனர்.