ஏழுமலையான் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம் : கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்!!

13 July 2021, 2:02 pm
Thirupathi - Updatenews360
Quick Share

திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் பக்தர்களின் பங்களிப்புடன் விமர்சையாக நடைபெற்றது.

இம்மாதம் 16ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் உற்சவம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திரு நாட்களுக்கு முன் வரும் செவ்வாய் அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை கழுவி சுத்தம் செய்வது வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும்.

அதன் அடிப்படையில் ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

அப்போது கோவில் கருவறை துவங்கி ஏழுமலையான் கோவில் அனைத்து பகுதிகள், தயாரிப்பு பாத்திரங்கள் நைவேத்யம் மற்றும் பிரசாதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஆகியவை அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Views: - 124

0

0