ஒரு தலைக் காதலால் பிளஸ் டூ மாணவி கொலை : இழப்பீடு வழங்க ஆந்திர முதலமைச்சர் உத்தரவு!

1 November 2020, 4:49 pm
Love murder - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஒரு தலை காதல் விவகாரத்தில் பிளஸ் டூ மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காஜுவாக்கா நகர் சுந்தரய்யா காலணியை சேர்ந்தவர் பதினேழு வயது இண்டர்மீடியட் மாணவி வரலட்சுமி.அதே பகுதியை சேர்ந்தவரான 3 ம் ஆண்டு சட்டம் படிக்கும் மாணவர் அகில்சாய். அகில்சாய மாணவி வரலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வரலட்சுமி அகில்சாய் நண்பர் ஆன ராமுவுடன் சுந்தரய்யா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சிரித்து பேசி் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமு இரண்டு பேரும் சிரித்து பேசி கொண்டு இருப்பதைக் கண்டு கடும் கோபம் அடைந்தான்.

இந்த நிலையில் நேற்று மாலை வரலட்சுமிக்கு போன் செய்து வெளியில் வரவழைத்த அகில் சாய் தான் உடன் எடுத்து வந்த கத்தியால் வரலட்சுமி கழுத்தை அறுத்து படுகொலை செய்தான்.
பின்னர் வரலட்சுமி உடலை புதர் ஒன்றில் வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

வரலட்சுமியை காணாமல் தேடிய குடும்பத்தினர் முட்புதரில் வரலட்சுமியுடன் உடல் கிடப்பது அறிந்து அங்கு சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வரலட்சுமி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

இந்த நிலையில் வரலட்சுமி கழுத்தை அறுத்து கொலை செய்த அகில் சாய், இரண்டு பேருக்கும் பொதுவான நண்பரான ராமு ஆகியோரை பிடித்து சென்ற போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வரலட்சுமி கொலைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வரலட்சுமி குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 21

0

0