ஆந்திராவில் மேலும் 2,665-பேருக்கு கொரோனா

11 July 2021, 8:55 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,576- பேர் இன்று குணம் அடைந்துள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 28,680- ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 81 ஆயிரத்து 161- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13,002- ஆக உள்ளது.

Views: - 94

0

0