கோவில் திருவிழாவில் தீ விபத்து : தேர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

6 September 2020, 2:05 pm
Andhra Car Festival Fire - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆந்திராவில் புகழ் பெற்ற லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான தேர் திடீர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சாகினேட்டிபள்ளி மண்டலம் அந்தர்வேதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்துக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தேரில் லட்சுமி நரசிம்ம சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக 60 ஆண்டுகளுக்கு முன்பு 40 அடி உயரத்தில் தேக்கு மரத்தால் தேர் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வீதிஉலா நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீதிஉலா நடைபெற்ற போது தேர் தீ பிடித்து எரிந்தது. இருப்பினும், தேரில் தற்செயலாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு யாராவது வேண்டுமென தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி சீனிவாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

Views: - 5

0

0