தொடர்பு எல்லைக்கு வெளியே சோனியா மற்றும் ராகுல்..! மேலும் ஒரு காங்கிரஸ் தலைவர் அதிருப்தி..!

25 August 2020, 1:13 pm
Anil_Sasthri_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு தொடரும் நிலையில், இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமைத்துவம் குறித்து மற்றொரு தலைவர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அனில் சாஸ்திரி, கட்சியின் உயர்மட்டத் தலைமை இரண்டாம் கட்டத் தலைவர்களாலும் டெல்லிக்கு வெளியே உள்ள பிற மாநில தலைவர்களாலும் எளிதில் அணுக முடியாத வகையில் உள்ளது என்று கூறினார்.

“காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சில விசயங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மிக முக்கியமான ஒன்று கட்சித் தலைவர்களிடையே கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கட்சித் தலைவர் டெல்லிக்கு வந்தால், இங்கு மூத்த கட்சித் தலைவர்களைச் சந்திப்பது அவருக்கு எளிதானது அல்ல.” என்று சாஸ்திரி மேற்கோளிட்டுள்ளார்.

மூத்த தலைவர்களையும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களையும் எளிதாக அணுக முடிந்தால் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பாதி தீர்க்கப்படும் என்று சாஸ்திரி கூறினார்.

“காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போன்றவர்கள் கட்சித் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கினால், 50% பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் ஒரு நாள் கழித்து சாஸ்திரியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Views: - 8

0

0