டெல்லியில் நில அதிர்வால் குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு… அலறியடித்து வெளியேறிய மக்கள் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 4:27 pm
Quake - Updatenews360
Quick Share

டெல்லியில் நில அதிர்வால் குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு… அலறியடித்து வெளியேறிய மக்கள் : அதிர்ச்சி வீடியோ!!

நேபாளத்தில் இன்று பிற்பகல் அடுத்தடுத்த இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்துகுஷ் மலை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

அதன்படி, நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவு மற்றும் 6.2 ரிக்டர் அளவில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு இன்று டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லி மட்டுமின்றி வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

மேலும், உத்தரகாண்ட், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு, அலுவலகங்களில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு 40 வினாடிகள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நிலநடுக்கம் நேபாளத்தில் பிற்பகல் 2:25 மணிக்கு பட்டேகோடா பகுதியை மையமாக கொண்டு 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பிற்பகல் 2.51 மணிக்கு மீண்டும் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் அடுத்தடுத்த இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 272

0

0