முதலிடத்தை பிடித்தது அம்பானியா? அதானியா? ஆசிய பணக்காரர்கள் பட்டியல் வெளியானது!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2022, 8:01 pm
Ambani - Updatenews360
Quick Share

ஆசிய பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது யார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சமீபத்தில் கணிசமாக உயர்ந்ததையடுத்து அதன் நிறுவனர் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆகியுள்ளார்.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவர் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். நடப்பு ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இவருக்கு அடுத்தபடியாக ரூ 7.66 லட்சம் கோடி சொத்து மதிப்பில் அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி உலக அளவில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

Views: - 695

0

0