ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கொரோனா உறுதி..! மத்திய அமைச்சரவையில் மூன்றாவது நபர்..!

12 August 2020, 7:15 pm
AYUSH_Minister_Sripath_naik_updatenews360
Quick Share

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோடி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சர் நாயக் ஆவார். 

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயுஷ் அமைச்சர் நாயக் தனது டிவீட்டில், “நான் இன்று கொரோனா சோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் தனக்கு எந்த உடல்நலப் பிரச்சனையும் இல்லையென்பதால் வீட்டிலேயே தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், கடந்த சில நாட்களில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விசாரித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 3

0

0