முதல்நாளே கூச்சல் குழப்பம்..! பீகார் சட்டசபை எதிர்க்கட்சிகள் அமளியால் முடக்கம்..!
25 November 2020, 1:41 pmசபாநாயகர் தேர்தலுக்காகவும், முதலமைச்சர் நிதீஷ் குமார் சபையில் இருப்பதற்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கூச்சலிட்டதால், பீகார் சட்டமன்றத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. ஆர்.ஜே.டி எம்.எல்.ஏக்கள் சபையின் நடுவில் சென்று நிதீஷ் குமார் சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதபோது ஏன் சபையில் இருந்தார் என்று கேள்வி எழுப்பினர்.
நிதீஷ் குமார் குமார் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.
தற்காலிக சபாநாயகர் ஜித்தன் ராம் மஞ்சி ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ.க்களை அவர்களுடைய இருக்கைகளுக்கு திரும்பச் சென்று தேர்தலை நடத்த அனுமதிக்குமாறு கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு நிதீஷ்குமார் சபைத் தலைவர் என்றும் அவர் சபையில் அமர்ந்திருப்பார் என்றும் தெளிவுபடுத்தினார்.
எம்.எல்.ஏக்கள் கோஷங்களை எழுப்பியபோது ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவும் சபையில் கலந்து கொண்டார். “சபாநாயகர் தேர்தலின் போது விதிகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
இன்று முன்னதாக, ஆர்.ஜே.டி தலைவரான லாலு பிரசாத் யாதவின் ஆடியோடேப் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிட்டத்தக்கது, அதில் சபாநாயகர் தேர்தலுக்கான சபை நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஆளும் என்.டி.ஏ எம்.எல்.ஏ.வை அவர் கேட்டுக் கொண்டார். பதிலுக்கு, லாலு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் சின்ஹாவை சபாநாயகர் பதவிக்கு என்டிஏ நிறுத்தியுள்ள நிலையில், மெகா கூட்டணி ஆர்ஜேடியின் அவத் பிஹாரி சவுத்ரியை சபாநாயகர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
0
0