ஆந்திராவின் அரசின் ஆதரவுடன் கன ஜோராக நடக்கும் மதமாற்றம்..! பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விளாசல்..!

12 April 2021, 9:37 pm
JP_Nadda_UpdateNews360
Quick Share

பாஜக தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இன்று ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பரவலான ஊழல்களை நடக்க அனுமதிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆந்திராவின் திருப்பதியில் மக்களவை இடைத் தேர்தல் ஏப்ரல் 17’ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அங்கு பேசியபோது, ​​மாநிலத்தில் அரசு ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் மத மாற்றத்தைப் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக நட்டா கூறினார். ஆந்திராவில் மதமாற்றங்களை மேற்கொண்டு வரும் மதத் தலைவர்களுக்கு மாநில அரசு ஆதரவளித்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்து கோவில்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கம் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நம்பாத தவறான அரசாங்கமாகும். பாஜக என்பது மதச்சார்பின்மையைக் குறிக்கிறது என்று நட்டா கூறினார்.

“பரவலான ஊழல், மது, மணல், நிலம் என அனைத்து வகையான ஊழல்களும் உள்ளன. மாநில கடன்கள் ரூ 4 லட்சம் கோடியை எட்டியுள்ளன. அவை உற்பத்தி செய்யாத பணிகளுக்காக செலவிடப்படுகின்றன” என்று திருப்பதியில் அவர் கூறினார்.

ஆந்திராவில் பாஜகவின் இணை பொறுப்பாளர் சுனைல் தியோதர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு நட்டாவின் கருத்துக்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் ஆந்திர மக்களை, குறிப்பாக இந்துக்களை மோசடி செய்து இந்து சான்றிதழ்களை சமர்ப்பித்து ஏமாற்றி வருகின்றனர்” என்று தியோதர் கூறினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திருப்பதி வேட்பாளர் டாக்டர் குருமூர்த்தி குறித்து பேசிய அவர், “குருமூர்த்தி சமுதாயத்திற்கு என்ன பங்களிப்பு செய்துள்ளார்? திருப்பதி பாலாஜி கோவிலுக்கு அவர் ஏன் வருகை தரவில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் திருப்பதி வேட்பாளரின் மதம் குறித்து முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியிடம் அவர் கேள்வி எழுப்பினார், “உங்கள் திருப்பதி வேட்பாளரின் மதம் என்ன? முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதில் சொல்ல வேண்டும் மற்றும் பொதுமக்கள் டாக்டர் குருமூர்த்தியின் மதத்தை சொல்ல வலியுறுத்த வேண்டும்.” எனக் கூறினார்.

ஆந்திராவில் பாஜக-ஜனசேனா கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குமாறு அவர் மேலும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 30

0

0