காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து ஓராண்டு நிறைவு : பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை!

6 August 2020, 12:32 pm
J&K 1- updatenews360
Quick Share

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆக., மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், அம்மாநிலத்தை இரு வேறு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவு அடைந்தது.

இதனால், ஜம்மு-காஷ்மீரில் அசம்பாவீதம் ஏதும் நிகழாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குல்காம் மாவட்டத்தின் பா.ஜ.க. துணை செயலாளர் சஜாத் அகமதுவின் மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாஜக துணை செயலாளர் சஜாத் அகமது மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, சஜாத் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காயமமைந்த அவர், அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சஜாத் அகமது உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் பா.ஜ.க. தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் 4-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 34

0

0