தந்தை கண்முன்னே மணமேடையில் முத்தமிட்ட மணமக்கள்.. வெட்கப்பட்ட புரோகிதர் : வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
24 November 2021, 8:02 pm
groom and bride kissing - updatenews360
Quick Share

திருமண நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தந்தை கண்முன்னே மணமக்கள் முத்தமிட்ட போது, புரோகிதர் வெட்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணம் என்றாலே வாழ்க்கையில் ஒருமுறை வரும் நிகழ்வு என்பதால், மறக்க முடியாத வகையில் ஏதேனும் ஒரு செயலை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான மணமக்களின் பேராசையாக இருக்கும். ஒரு சிலர் உணவு வகைகளை போட்டு அசத்துவார்கள். இல்லையெனில் வரவேற்பு நிகழ்ச்சியை வியக்கும் அளவுக்கு செய்வார்கள். சிலரோ, வித்தியாசமான போட்டோ ஷுட்டுக்களை நடத்துவார்கள்.

இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் மணமக்களும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வந்த புரோகிதரும் செய்த குயிட்டான செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, மணமகனின் தந்தை மணமக்களை முத்தமிடச் சொல்லுமாறு, புரோகிதரிடம் சொல்லுகிறார். இதனைக் கேட்டு தயங்கிய அவரோ, சிறிது வெட்கத்துடன், இருவரும் முத்தமிட்டுக் கொள்ளுங்கள் என்கிறார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இதற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CVKGVpaBfEI/?utm_source=ig_web_copy_link

Views: - 307

2

4

Leave a Reply