43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..! மத்திய அரசு அடுத்த அதிரடி..!

24 November 2020, 5:41 pm
43_App_Ban_India_UpdateNews360
Quick Share

மத்திய அரசு இன்று மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69’ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை இந்தியாவில் பயனர்கள் அணுகுவதைத் தடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

43 மொபைல் செயலிகளுக்கான அணுகலைத் தடுக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69’ஏ பிரிவின் கீழ், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு பாரபட்சமற்ற செயல்களில் ஈடுபடுவதாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“இந்திய இணைய குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், உள்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயனர்களால் இந்த செயலிகளின் அணுகலைத் தடுப்பதற்கான உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது” என்று அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் பல செயலிகளை ஜூன் 29 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் அரசாங்கம் தடைசெய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். தடைசெய்யப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தடை செய்யப்பட்ட மொபைல் செயலிகளின் விபரம் பின்வருமாறு :

Views: - 0

0

0