பாஜகவில் உள்ள நடிகை குறித்து சர்ச்சை பேச்சு.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு RED CARD.. 48 மணி நேரம் தடை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 7:45 pm
Cong
Quick Share

பாஜகவில் உள்ள நடிகை குறித்து சர்ச்சை பேச்சு.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு RED CARD.. 48 மணி நேரம் தடை!!

உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா லோக்சபா தொகுதி பா.ஜ.க வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இவர் குறித்து காங்., பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சேபிக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டார்.

இது சர்ச்சையை கிளப்பியது தேசிய மகளிர் ஆணைம் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கடந்த 4-ம் தேதி பா.ஜ.க புகார் அளித்தது.

மேலும் படிக்க: இளைஞர் கேட்ட கேள்வி.. பிரச்சாரத்தை நிறுத்திய சௌமியா அன்புமணி : வைரலாகும் ஷாக் VIDEO!!

தேர்தல் ஆணையம் சுர்ஜேவாலாவுக்கு ஏப்.09-ம் தேதி சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. திருப்தியில்லை என்பதால், தேர்தல் ஆணையம் இன்று பிறப்பித்த உத்தரவில் காங்., பொதுச்செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 242

0

0