சீமான் ஒரு பரதேசி… அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ; ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 5:12 pm
Quick Share

ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி, நாங்கள் வரவேற்போம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு திருமகன் ஈவெரா சாலையில் உள்ள குடியரசு இல்லத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தமிழகம் வந்து சென்றுள்ளார். முகமது கஜினி இந்தியாவுக்கு பலமுறை வந்து கொள்ளையடித்து சென்றது போல, இப்போது மோடி தமிழகத்திற்கு படையெடுத்து வருகிறார். இதனால் மோடி உட்பட எத்தனை அமைச்சர்கள் தமிழகம் வந்தாலும், பாஜக வெற்றி பெற போவதில்லை. பாஜகவின் ரோடு ஷோவை புறக்கணித்து வருகிறார்கள். ரோடு ஷோவை மக்கள் வெறுக்கிறார்கள்.

மேலும் படிக்க: முன்னாள் முதலமைச்சர் வீட்டருகே பில்லி, சூனியம் நடத்தப்பட்டதா? தடயங்கள் கிடந்ததால் அதிர்ச்சி..!(Video)

காமராஜர் பற்றி மோடி பேச துளிக்கூட அருகதை இல்லை. காமராஜர் அகில இந்திய தலைவராக இருந்த போது, மோடியின் மூத்த தலைவராக உள்ளவர்கள், கொலை முயற்சி செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த மோடி காமராஜர் பற்றி பேச என்ன அருகதை கிடையாது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா மிகப்பெரிய வல்லரசாக வரும் என மோடி சொல்கிறார். ஏன் சொல்லுகிறார் என்றால் மோடி அதற்குள் முடிந்து விடுவார். இதனால் மக்கள் நம்ப மாட்டார்கள்.

தமிழ்மொழி அங்கீகாரம் கொடுக்க தமிழகத்தில் செய்ய என்ன நடவடிக்கை எடுத்தார். ரயில் நிலையம், வானொலி ஆகியவற்றின் மூலம் தமிழ்மொழி பரப்ப வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியில் சொல்லும் திட்டம், ஆங்கிலத்திலும் சொல்லும், ஆனால் இவர்கள் ஆட்சி காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கலாச்சாரம் படைத்த தமிழ்மொழி மீது அக்கறை இருக்கும் வகையில் காட்டி கொள்கிறார்.

தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தினை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தேர்தலில் கதாநாயகனாக உதயநிதி தமிழகத்தில் இருக்கிறார். கடந்த 15 தினங்களாக நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். வரும் காலத்தில் திமுக தொண்டர்கள் உட்பட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்த போது, மேஜை கீழ் கை விட்டு வேலை செய்தால், அவரை வேலை விட்டு நீக்கம் செய்துள்ளார்கள். 10 மணிக்கு மேல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் அறிவாளி என்று சொல்லிக் கொள்ளும் நிலையில், தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் மீறி இரவில் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் அலுவலர்களை அசிங்கமாக பேசி உள்ளார். இந்த தேர்தலோடு மோடியோடு சேர்ந்து அண்ணாமலை காணாமல் போய்விடுவார்.

மேலும் படிக்க: 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கென ஒரு புல்லை கூட பிடுங்கி போடல… பாஜக குறித்து அமைச்சர் உதயநிதி பாய்ச்சல்!!

52 ஆயிரம் வீடுகள் மாவட்டம் தோறும் கட்டி இருப்பதாக பச்சை பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மோடி செய்வது தான் தேச துரோகம். கச்சத்தீவை காங்கிரஸ், திமுக இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது உண்மை. ஆனால் பாஜக 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டு இருக்க வேண்டும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான், சீனா, பூட்டான் ஆகிய நாட்டை பார்த்தால் பயம். சீனா, அருணாச்சலம் பிரேதத்தில் 30 இடங்களில் சீனா கைப்பற்றி உள்ளது. இந்திய நாட்டை அடகு வைக்கும் முயற்சி செய்யும் நீங்கள் தான் தேச விரோதி.

தலைச்சிறந்த அமெரிக்கா கூட பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால் நாட்டில் வாக்குசீட்டு முறை கொண்டு வரவேண்டும். அதிமுக உடைக்க அழிப்பதற்கு என்ன இருக்கிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியவற்றால் பிரிந்து உள்ளது. வரும் காலத்தில் தங்கமணி வேலுமணியாக பிரிய வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் வழங்குவது சாத்தியம். நயினார் நாகேந்திரனிடம் பிடிப்பட்டதாக சொல்லும் விவகாரத்தில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். சீமான் பேசுவது இன்னொரு பரதேசி பேசுவதற்கு நான் பதில் சொல்லவில்லை. மோடியின் கொத்தடிமைகளாக தேர்தல் ஆணையம் உள்ளது.

மது கடைகள், தெருக்கள் தோறும் வருவது தான் முன்னேற்றம். உலகத்தில் எல்லா நாடுகளிலும் குடிப்பார்கள். இந்தியாவில் எல்லா பகுதியில் குடிப்பார்கள். மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றால், நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது. போன முறை விட இந்த முறை வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும், நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ராகுல் பிரதமராக வந்தாலும் சரி, ஸ்டாலின் பிரதமராக வந்தாலும் சரி, நாங்கள் வரவேற்போம். மோடி தவிர யார் வந்தாலும் சரி, என்னை பொறுத்தவரை ராகுல்காந்தி, ஸ்டாலின் ஒன்று தான். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்லி வந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் பெண்கள், மாணவர்கள் ஆகியவற்றுக்கு திட்டம் காமராஜர் ஆட்சி பிரதிபலிக்கும் வகையில் தான் இருக்கிறது.

மோடி இருந்தால் தேர்தல் பத்திரம் மட்டும் இல்லை, தேர்தலே இருக்காது என்று தான் எங்கள் கவலை, மோடி அமித்ஷா, நட்டா ஆகிய எல்லாம் ஒன்று தான். மோடி பெரியார் பெயரை பயன்படுத்தினால் கூட ஆச்சரியம் பட ஒன்றும் இல்லை. அவர் இடியமின் மிஷோரின் ஆகியோரின் பெயரை தான் பயன்படுத்த வேண்டும், எனக் கூறினார்.

Views: - 132

0

0