கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வீட்டில் வைத்து இறுதிச்சடங்கு செய்யலாம் : கேரள அரசு அனுமதி

Author: Babu Lakshmanan
30 June 2021, 6:23 pm
Corona_Death_UpdateNews360
Quick Share

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களின் வீட்டில் வைத்து அவரவர் சம்பிரதாய அடிப்படையில் இறுதிச் சடங்கு செய்ய கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அவர் கூறியதாவது :- கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை மக்களின் மனங்களை நெருடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்பவர்களின் உடலை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது, அந்த கட்டுப்பாட்டை கேரள அரசு தளர்த்துகிறது.

அதாவது, கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். சுமார் ஒரு மணி நேரம் வீட்டில் வைத்து, மத ரீதியிலான இறுதிச்சடங்கை நடத்திக் கொள்ளலாம்.

கேரளாவில் 2வது அலை படுவேகமாக பரவியிருந்தாலும், அதனை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், நோய் தாக்கத்தின் எள்ளவு வந்தாலும், அதனை சமாளிக்கும் மருத்துவக் கட்டமைப்பு நம்மிடம் இருப்பது தெரிய வருகிறது. 2வது அலையின் தாக்கம் குறைய இன்னும் பல காலம் ஆகும் என்பதால், அதுவரையில் தளர்வுகளை அறிவிக்க இயலாது. மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, என கூறினார்.

Views: - 259

0

0