குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
Author: kavin kumar20 August 2021, 8:45 pm
நாடு முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,” நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கூறினார். குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ZYDUS CADILA மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான முடிவுகள் அடுத்த மாதத்தில் தெரியவரும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாகவும் அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார்.
0
0