கல்லா கட்டிய கள்ள நோட்டு பிசினஸ் : பாதுகாப்பு படை ஊழியரிடம் ரூ.16 லட்சம் பறிமுதல்.. 5 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2021, 4:23 pm
Telanganna Arrest -Updatenews360
Quick Share

தெலுங்கானா : கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு படை ஊழியர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சித்தி பேட்டையை சேர்ந்த புகைப்பட கலைஞர் சந்தோஷ்குமார் போட்டோ லேப் அமைப்பதற்கு திட்டம் தீட்டினார்.

அதற்கு தேவையான பணம் இல்லாத காரணத்தால் தன்னுடைய நண்பர்களான கூரியர் நிறுவனம் நடத்தும் சாய்குமார், பி.காம் முதலாம் ஆண்டு படித்து விடும் நீரஜ் குமார், ஜலகம் ராஜ் ஆகியோருடன் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி இறுதியில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது என்று முடிவு செய்தனர் .

லேப்டாப்,பிரிண்டர் மற்றும் கள்ளநோட்டு அச்சிடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி 500 ரூபாய் 2000 ரூபாய் ஆசிய முக மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டனர். அவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படை ஊழியரான சீனிவாசஸ் என்பவர் கமிசன் அடிப்படையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தார்.

இது பற்றிய தகவல் அறிந்த சித்தி பேட்டை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் லேப்டாப், பிரிண்டர் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சிட பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 272

0

0