பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: டெல்லி மக்களுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்…!!

5 November 2020, 2:13 pm
Aravind_kejriwal_Updatenews360
Quick Share

டெல்லி மக்கள் தயவுசெய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி: தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசுவை கட்டுப்படுத்த அரகூ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள அதன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது தான் என்ற தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. வரும் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தேதிகளில் டெல்லி மற்றும் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Fire_Crackers_Ban_UpdateNews360


இதனைத்தொடர்ந்து டெல்லி அதன் அண்டை மாநிலங்களில் தற்போது பட்டாசு விற்பனையும் மெதுவாக துவங்க ஆரம்பித்து, அதனை பொதுமக்கள் வெடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,

தயவு செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் உங்கள் சொந்த குடும்பத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். நவம்பர் 14ம் தேதி இரவு 7.49 மணிக்கு, 2 கோடி டெல்லி குடிமக்கள் ஒன்று சேர்ந்து லக்ஷ்மி பூஜை செய்வார்கள். பூஜையை நான் தொடங்கி வைக்கிறேன். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0