கவிதாவை தொடர்ந்து முதலமைச்சருக்கு ED போட்ட ஸ்கெட்ச் ; முந்திக் கொண்ட கெஜ்ரிவால் ; நீதிபதி போட்ட உத்தரவு

Author: Babu Lakshmanan
16 March 2024, 12:07 pm
Quick Share

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் முடிவில் கவிதாவை கைது டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அவரது கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று அவர் இன்று நேரில் ஆஜரானர். அப்போது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 192

0

0